வைத்திய கலாநிதி சுஜந்தன் காசிலிங்கம் அவர்களின் “ஊன்று கோல்”நூல் அறிமுக விழா அழைப்பு

441 Views

WhatsApp Image 2022 11 23 at 12.50.58 PM வைத்திய கலாநிதி சுஜந்தன் காசிலிங்கம் அவர்களின் “ஊன்று கோல்"நூல் அறிமுக விழா அழைப்பு

எழுத்தாளர் “போர் உலா” நாயகன் மாவீரன் கப்டன் மலரவன் (விஜிந்தன் காசிலிங்கம்) அவர்களின் 30 ஆம்  வருட நினைவு ஆண்டில் அவரது சகோதரன் வைத்திய கலாநிதி சுஜந்தன் காசிலிங்கம் (சுருதி) அவர்களின் எழுத்தில்   உருவாகி – வழி நெடுகிலும்   வலிகளையும்  வரலாற்றையும் ஆவணமாக்கியுள்ள – சாட்சிகளற்று அழிக்கப்பட்ட ஓர் இனத்தின் கவனிக்கப்பட வேண்டிய படைப்பாகிய “ஊன்று கோல்”நூல் அறிமுக விழா வருகின்ற (26.11.2022) சனிக்கிழமை  இலண்டனில் நடைபெறவுள்ளது.

WhatsApp Image 2022 11 23 at 11.59.03 AM வைத்திய கலாநிதி சுஜந்தன் காசிலிங்கம் அவர்களின் “ஊன்று கோல்"நூல் அறிமுக விழா அழைப்பு

கவிஞர் பாலரவி தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் ஆசியுரையை புலவர் சிவநாதனும் வெளியீட்டுரையினை திரு வாணனும் வழங்கவுள்ளனர். தமிழறிஞர் மூத்த ஊடகவியலாளர் எழுத்தாளர், ஆய்வாளர், சைவசித்தாந்த ஆசிரியர் முனைவர் திரு.சூ.யோ.பற்றிமாகரன்,போரியல் ஆய்வாளர் திரு.அருஸ், அண்ணா பல்கலைக்கழக ஆசிரிய பட்டதாரி மாணவி திருமதி விழியரசி, திருமதி அஞ்சு ராமதாஸ் (தமிழவை), ஆய்வாளர் திரு குணாகவியழகன், பொருளாதார ஆய்வாளர் திரு.க.பாலகிருஸ்ணன் ஆகியோர் கருத்துரையாற்றுவார்கள்.

WhatsApp Image 2022 11 23 at 11.57.31 AM வைத்திய கலாநிதி சுஜந்தன் காசிலிங்கம் அவர்களின் “ஊன்று கோல்"நூல் அறிமுக விழா அழைப்பு

இடம்:  St John The Evangelists Community Centre, Wembley, HA0 2HX.

நேரம்: 1:00(13:00)  தொடக்கம் 4:30 (16:30) வரை நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்விற்கு அனைவரையும்  அன்போடும் உரிமையோடும்  அழைக்கிறோம்.

Leave a Reply