அவுஸ்திரேலியா:தொழிற்கட்சி ஆட்சி வந்தால் படகு வருகைகள் அதிகரிக்கும் என்றோம், அது தான் நடந்து கொண்டிருக்கிறது- முன்னாள் அமைச்சர்

106 Views

“ஆட்கடத்தல்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். (தொழிற்கட்சி ஆட்சி வந்தால்) இதுதான் நடக்கும் என்று கூறினோம், அது நடந்து கொண்டிருக்கிறது,” எனக் கூறியிருக்கிறார் தாராளவாத தேசிய கூட்டணி ஆட்சியின் போது உள்துறை அமைச்சராக இருந்த கரேன் ஆண்டூருஸ்.

“சட்டவிரோத படகு வருகைகளை எவ்வாறு நிர்வகிக்க போகிறது என அல்பனீஸ் (தொழிற்கட்சி) அரசாங்கம் உடனடியாக விளக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை இந்த அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டும்,” என முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே சமயம், படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிதாக ஆட்சி வந்துள்ள அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் இருந்து வருகிறது. இந்த கொள்கையின் அடிப்படையிலேயே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply