குருந்தூர் மலை விவகாரம்:’நாடு நெருக்கடியில் சிக்கி சீரழியும் போது இந்த தேரர்களுக்கு வேறு வேலை இல்லையா?’

126 Views

தேரர்களுக்கு வேறு வேலை இல்லையா

இலங்கை நெருக்கடியில் சிக்கி சீரழியும் போது இந்த தேரர்களுக்கு வேறு வேலை இல்லையா?  என முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் கோவில் விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “ஆக்கிரமிப்பை நேரடியாக களத்துக்கு சென்று தடுத்து நிறுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன் செல்வராசா, வினோ நோகராதலிங்கம் மற்றும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் பாராட்டுக்குரியவர்கள்.அடுத்த முறை எனக்கும் சொல்லுங்கள். நானும் வர முயல்கிறேன்“ என பாராளுமன்ற உறுப்பினர் மகோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது அதாடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முழு நாடும் உணவு, எரிபொருள், மருந்து நெருக்கடியில் சிக்கி சீரழியும் போது, இன்று இதுபற்றிய நீதிமன்ற தடையும் இருக்கும் போது, இந்தியா-பங்களாதேஷ்-ஐரோப்பிய நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி நாட்டை ஓட்டும்போது, சீருடை மற்றும் சிவிலுடை இராணுவ சிப்பாய்களின் துணையுடன் காவியுடை பெளத்த தேரர்கள் இங்கே வந்து அடாத்தாக மத-இனமோதலை உருவாக்குகிறார்கள்.

இது இவர்களுக்கு தேவையா? இவர்களை வைத்துக்கொண்டு ஒருபோதும் இந்நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை கொண்டு வர முடியாது. அதனால்தான் நான் அரசியலில் இருந்து மதத்தை ஒதுக்க போராடுகிறேன். குறிப்பாக இந்த காவியுடை பயங்கரவாதிகளை ஒதுக்க கோருகிறேன்.

ஆயிரம் காலிமுக திடல் போராட்டங்கள், அந்த “அரகல”, (அதையும் இப்போ காணோம்..!) போராட்டங்கள், நடந்தாலும், தேரர்கள் செல்வாக்கு செலுத்தும் அரசமைப்பினால், நாட்டில் மாற்றம் கஷ்டமே.

முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் கோவில் எனக்கு தெரியும். 2018ம் தேரர் ஒருவர் இங்கே விகாரையமைக்க முயன்ற போது நான் அதில் தலையிட்டேன். பின் கடைசி கொஞ்ச காலம், இந்து துறை அமைச்சராக இருந்த போதும் இது என் கவனத்துக்கு வந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply