கரும்புலிகள் நினைவு நாளில் அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்

683 Views

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வில் அவுஸ்ரேலிய சவுத் வேல்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் hugh mcdermott கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த கரும்பலிகளின் நினைவாக ஜூலை 5 கரும்புலி நாளாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் நினைவுகொள்ளப்படுகிறது. அவ்வாறன ஒரு நிகழ்விலேயே hugh mcdermott கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.அவர் தொடர்ச்சியாக தமிழ்மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்து வரும் ஒருவராவார்.

தமிழருக்கு எதிராக இடம்பெற்ற கொடூரங்கள் ”இனப்படுகொலை” என அண்மையில் அவர் ஆதாரங்களுடன் பதிவிட்டுருந்ததைத் தொடர்ந்து சிங்களவர்கள் 10,000 கையெழுத்துக்களை அவருக்கு எதிராக திரட்டியிருந்தனர்.இதனை முறியடிக்கும் வகையில் தமிழ் சமூகம் இலட்சக்கணக்கான கையெழுத்துக்களை அவருக்கு ஆதரவாக திரட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply