இலங்கை சூழல் இந்தியாவிலும் ஏற்படும் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும் – திருமாவளவன்

59 Views

இலங்கை சூழல் இந்தியாவிலும் விரைவில் ஏற்படும் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்   கருத்து தெரிவிக்கையில்,  இலங்கையில் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே சட்டம், ஒரே ஆட்சி என்ற ஒற்றைத் தன்மை நோக்கி ராஜபக்ஷ குடும்பம் இலங்கையை இழுத்துச் சென்றதால் இலங்கைத்தமிழர் நசுக்கப்பட்டு பன்முகத்தன்மை சிதைக்கப்பட்டது.

இதே நிலைமை இந்தியாவிலும் மோடி அரசால் வழி நடத்தப்படுகிறது. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே சட்டம் என்ற இலக்கை நோக்கி பாஜக செல்கிறது. இந்தியை திட்டமிட்டு திணிக்கிறது. எனவே, இலங்கையில் ஏற்பட்ட நிலைமை இந்தியாவிலும் விரைவில் ஏற்படும் என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

Tamil News

Leave a Reply