“எவரையும் பழி வாங்கும் எண்ணம் என்னிடம் அறவே இல்லை. ஆனால், தீர்மானங்களை எடுக்கும் போது தந்தை ஒருவரைப் போன்று சில நேரங்களில் கசப்பான விடயங்களைச் செய்ய வேண்டி ஏற்படும்” என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று புதிய நிதி அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தற்போது பிரச்சினை என்ன என்பது தொடர்பான புரிதல் எனக்கு இருக்கின்றது. நாட்டின் நலன் கருதி தீர்மானங்களை எடுக்கும் போது தந்தை ஒருவரைப் போன்று சில நேரங்களில் கசப்பான விடயங்களைச் செய்ய வேண்டி ஏற்படும். அவை உண்மையாகவே பொது மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டதாக இருக்கும்” என்றார்.