Home செய்திகள் கசப்பான விடயங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும்; பதவியேற்றவுடன் பஸில்

கசப்பான விடயங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும்; பதவியேற்றவுடன் பஸில்

basil rajapaksa finance minister கசப்பான விடயங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும்; பதவியேற்றவுடன் பஸில்“எவரையும் பழி வாங்கும் எண்ணம் என்னிடம் அறவே இல்லை. ஆனால், தீர்மானங்களை எடுக்கும் போது தந்தை ஒருவரைப் போன்று சில நேரங்களில் கசப்பான விடயங்களைச் செய்ய வேண்டி ஏற்படும்” என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நேற்று புதிய நிதி அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் பொறுப் பெடுத்துள்ள சவாலை மேற்கொள்வதற்கு அனைவரினதும் பூரண ஒத்துழைப்பும் அவசியம். நான் கடினமான ஒரு விடயத்தைப் பொறுப் பேற்றுள்ளேன். சவாலை ஒன்றிணைந்து வெற்றி கொள்வோம். பொது மக்களின் தேவைகளே இந்த அரசினதும் எனதும் முன்னுரிமையாக அமையும்.

தற்போது பிரச்சினை என்ன என்பது தொடர்பான புரிதல் எனக்கு இருக்கின்றது. நாட்டின் நலன் கருதி தீர்மானங்களை எடுக்கும் போது தந்தை ஒருவரைப் போன்று சில நேரங்களில் கசப்பான விடயங்களைச் செய்ய வேண்டி ஏற்படும். அவை உண்மையாகவே பொது மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டதாக இருக்கும்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version