மட்டக்களப்பு ஈரள குளம் விவசாயிகள் வீதியை மறித்து போராட்டம்

ஈரள குளம் விவசாயிகள் வீதியை மறித்து போராட்டம்

சட்டவிரோத மண் அகழ்வு காரணமாக தங்களது வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மண் வளம் சூறையாடப்படுகின்றதை கண்டித்தும் இன்று  செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரள குளம் விவசாயிகள் வீதியை மறித்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில், அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியா ழேந்திரன் ஆகியோர் தலையிட்டு உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரியும் மண்ணைச் சுரண்டுவதா, கிழக்கை மீட்கும் பணி என  கேள்வியெழுப்பியிருந்தனர்.

மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த கனரக வாகனங்களை திருப்பி அனுப்பியதுடன் மண்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களை மறித்து அனைத்து மண்ணையும் எடுதம்த இடத்திலேயே  கொட்டும்படிம் செய்துள்ளனர்.

இதையடுத்து மண்ணை ஏற்றிச் செல்வதற்கு அனுமதியைப் பெற்றிருந்த உரிமையாளர்,  விதி சேதமடைந்தது வேதனைக்குரிய விடயம் எனவும் குறித்த வீதியினை தனது செலவில் செப்பனிட்டுக் தருவதாகவும் இன்றைய நாளில் இருந்து  மண்ணை வெளி மாவட்டத்துக்கு அனுப்புவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்றும் உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.