மட்டக்களப்பு: சுகாதார துறையினர் போராட்டம்

IMG 0009 மட்டக்களப்பு: சுகாதார துறையினர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி வைத்தியசாலைகளில் சுகாதார துறையினர் இன்று சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதுடன் இன்றைய தினம் வைத்தயிசாலைகளில் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று சுகாதார துறையின் தொழிற்சங்க உறுப்பினர்கள் வைத்தியசாலையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார துறையினர் போராட்டம்

சேவை தரம் உறுதிப்படுத்தப் படவேண்டும், சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படல் வேண்டும், கடந்த அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட பதவி உயர்வு தீர்மானங்கள் இதுவரையில் நிறைவேற்றப்படாமை,சிறிய தொகையாக வழங்கப்பட்டுள்ள சிறியளவில் வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படவேண்டும், தரநிலை தொடர்பிலான சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் அதனை நடைமுறைப்படுத்தப்படாமை, சுகாதார துறையில் உள்ளவர்கள் பட்டங்களைப் பெறும்போது அவர்களுக்கான பதவியுயர்வுகள் வழங்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார துறையினர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார துறையின் தாதியர்கள்,மருந்தகஉதவியாளர்கள்,மருந்தாளர்கள் இணைந்து சுகவீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்துவரும் அதேநேரம் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக வைத்தியசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோயாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.