மட்டக்களப்பு மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

193 Views

IMG 0104 மட்டக்களப்பு மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் மூன்று உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஏனைய ஊழியர்களும் இன்று புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் ராஜ்குமார் தலைமையில்   பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் மேலும் மூன்று ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை தொடர்பாக கண்டறியப் பட்டுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகர சபையானது தற்காலிமாக மூடப்பட்டுள்ளதுடன், நோயாளர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேநேரம் இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட  கொரோனா பரிசோதனைகளில் 60க்கும் மேற்பட்டவர்கள் நோயாளர்களாக இனங்காணப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 189 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர் என்று  மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் முத்துலிங்கம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2 இலட்சத்தி 75 ஆயிரம் தடுப்பூசிகள் முதலாம் கட்டமாக வழங்கப் பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலை காரணமாக 9626கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளதாகவும்  137 பேர் இது வரையில் மரணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply