மட்டக்களப்பு-சுகாதார துறை ஊழியர்கள் போராட்டம்

சுகாதார துறை ஊழியர்கள் போராட்டம்

சுகாதார துறை ஊழியர்கள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் சுகாதார துறை ஊழியர்கள் இன்று ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்ததுடன் கவன ஈர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து இந்த போராட்டங்களை அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம்,சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனம் உட்பட பல சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து  முன்னெடுத்தது.

இன்று பிற்பகல் 12.00மணி தொடக்கம் 1.00மணி வரையில் பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு கவன ஈர்ப்பு போராட்டங்களும் நடாத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் சுகாதார துறையினர் ஈடுபட்டனர்.

மருந்து மாபியா கொள்ளைகளை நிறுத்து,பதவி உயர்வுகளை வழங்கு,சம்பள முரண்பாட்டை நீக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.