முஸ்லிம் மக்களை நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து

முஸ்லிம் மக்களை நம்புவதாக

முஸ்லிம் மக்களை நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வலியுறுத்தி முன்னெடுக்கப் படும் போராட்டங்களை முஸ்லிம் பகுதிகளில் நடாத்துவதற்கு யாரும் தலைமைதாங்க முன்வருவார்களானால் அவர்களுடன் இணைந்து அப்பகுதிகளில் போராட்டங்களை நடாத்த தயாராகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மேலும்  20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பாவிட்டாலும் முஸ்லிம் மக்களை நம்புவதாகவும் இரா.சாணக்கியன் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப் படும்போராட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடியிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tamil News