மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்கள் மழைகாலங்களில் பெரிதும் பாதிக்கப்படுவதை குறைப்பதற்கான செயற்றிட்டங்களை அறிமுகம் செய்து சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளை தெளிவு படுத்தும் முகமகாவே இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயங்களினால் மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாகவும், அடிக்கடி பாதிக்கப்படும் மாவட்டமாகவும் இனங்காணப்பட்டடுள்ளது. கடந்த 1957 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்புக்குப் பின்னர் ஏற்பட்ட பல வெள்ள அனரத்தங்களை மையப்படுத்தி பெறப்பட்ட ஆய்வின் அடிப்டடையில் இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தத்தின்போது எவ்வாறு மக்களைப் பாதுகாப்பது, வெள்ள நீரினை எவ்வாறு சேமிப்பது, வேறு தேவைகளுக்காக எவ்வாறு அதனைப் பயன்படுத்துவது போன்ற திட்டங்கள் இதில் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும் வெள்ள நீர் வடிந்தோடக்கூடிய மட்டக்களப்பு முகத்துவாரம், வாழைச்சேனை முகத்துவாரம் மற்றும் கல்லாறு போன்ற பகுதிகளும் இத்திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின் குடியிருப்பு, அவர்களின் சொத்துக்கள், வயல் நிலங்கள், பொருளாதாரம், நீர் முகாமைத்துவம் போன்றவற்றின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது.
இதில் மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் உயந்து நீர் பெருகுவதைக் கட்டுப்படுத்தல், கல்லாறு நீர் வெளியேறும் பகுதியினை அபிவிருத்தி செய்தல், மட்டக்களப்பு முகத்துவாரப் பகுதியினை அபிவிருத்தி செய்தல், ஓட்டமாவடி பாலத்திற்கருகில் கால்வாய் மற்றும் புகையிரதக் கடவை அமைத்தல், சந்திவெளி பகுதியில் கால்வாய் மற்றும் புகையிரதக் கடவை அமைத்தல், கிரான் பிரதேசத்தில் புதிதாக பாலம் அமைத்தல், மாதுறு ஓயாவின் பழமை வாய்ந்த கால்வாயினை புனருத்தானம் செய்தல், சித்தான்டி தேவபுரம் பகுதியில் பாலம் அமைத்தல், செங்கலடி நகர் புரத்தின் ஏ-15, ஏ-5 வீதிகளில் தாழ்வாக உள்ள பகுதிகளை பாதுகாக்கும் தி வெள்ள அபாயத்தினைக் குறைக்க முந்தானை ஆற்றினை மையப்படுத்திய திட்ட முன்மொழிவுத்தினை மேற்கொள்ளல், உன்னிச்சைக்கு மேலாக மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களை உள்ளடக்கிய உயர் நிலத்தில் புதிய குளம் ஒன்றினை அமைத்தல் போன்ற 10 தலைப்புகளின் கீழ் ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இத்திட்டங்கள் தொடர்பான சாதக பாதகங்கள் கருத்துப் பரிமாரல்கள் சம்மந்தப்பட்ட திணைக்கள தலைவர்களால் முன்வைக்கப்பட்டு அதர்கான தீர்மானங்கள் எட்டப்பட்டன. இவ்விசேட கலந்துரையாடலில் காலநிலை பின்னடைவு முன்னேற்றத் திட்ட பணிப்பாளர் பொறியியலாளர் டீ.எஸ்.சீ. எலகந்த, மத்திய நீர்பாசன திணைக்கள மேலதிக செயலாளர் பொரியியலாளர் பளுகஸ்வெவ, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், நீர்பாசன திணைக்களம், நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, விவசாய விரிவாக்கல் திணைக்களம், கமநல சேவைகள் தினைக்ளம் போன்றவற்றின் உயர் அதிகாரகள், உள்ளுராட்சி அதிகார சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.