பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க முடியாது – மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம்

LATE CITY DM 1 974 பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க முடியாது – மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம்

பாராளுமன்றத் தேர்தலின் போது பொதுஜன பெரமுன வினால் சமர்ப்பிக்கப் பட்ட மாவட்ட ரீதியான வேட்பாளர் பட்டியல் மற்றும் தேசியப் பட்டியல் ஆகியவற்றில் பெயர் உள்ளடக்கப் பட்டிருக்காத பசில் ராஜபக்ச, தற்போது வெற்றிடமாகி இருக்கும் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப் பட்டிருப்பதானது அரசியல் அமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் முற்றிலும் புறக்கணிக்கும் செயற்பாடாகும் என மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம்  தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்சவை  சிறீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம், மேலும் இது குறித்து தெரிவிக்கையில்,

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருக்கின்றமையினால் பசில் பாராளுமன்ற உரிப்பினராகும் தகுதியை இழந்திருந்தார் ன்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மாவட்ட நியமன பத்திரத்தில் சேர்க்கப் பட்டுள்ள அல்லது குறிப்பிட்ட கட்சியினால் சமர்ப்பிக்கப் பட்டுள்ள தேசிய பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒருவரையே அரசமைப்பின் படி வெற்றிடத்திற்கு நியமிக்க முடியும் என்பதே தனது நிலைப்பாடு என மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தேர்தலில் கட்சியால் நியமிக்கப்படாத ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது மக்களின் இறையாண்மையாக இருக்கும் வாக்களிப்பு உரிமையை மீறும் செயல் எனவும் மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க முடியாது – மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம்