பசில் இந்தியாவிற்கு பயணம்- பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

317 Views

பசில்ராஜபக்ச இந்தியாவிற்கு பயணம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நிதியமைச்சர் பசில்ராஜபக்ச இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார்.

இந்தப் பயணத்தின் போது நிதியமைச்சர் இந்திய பிரதமர் உட்பட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியால் இலங்கை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக இந்தியாவிடமிருந்து கடன்கோருவதே நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய பயணத்தின் நோக்கம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அதிகளவு முதலீட்டை ஊக்குவிப்பதே நிதியமைச்சரின் பயணத்தின் நோக்கம் என அரசாங்க  தகவல்கள் தெரிவித்தாலும் அந்நிய செலாவணி கையிருப்பு பிரச்சினையால் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக கடனை கோருவதே அவரது பயணத்தின் நோக்கம் என  மூத்த அதிகாரிகள் தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad பசில் இந்தியாவிற்கு பயணம்- பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

Leave a Reply