ரோஹிங்கியா பிரச்னைக்கு தீர்வு காணவும் அப்பிரச்னையால் வங்கதேசத்தில் ஏற்படும் நெருக்கடியை தீர்க்கவும் சர்வதேச சமூகம் தீவிரமான முயற்சியை எடுக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார்.
“மூன்றாண்டுகள் கடந்த விட்ட நிலையிலும் இதுவரை ஒரு ரோஹிங்கியா(அகதி) கூட (மியான்மருக்கு) திரும்பவில்லை. ரோஹிங்கியா நெருக்கடி மியான்மரால் உருவாக்கப்பட்டது, இதற்கான மியான்மரிலேயே தான் உள்ளது,” என காணொலி வாயிலாக அவர் பேசிய உரையில் ஹசினா குறிப்பிட்டுள்ளார்.