வங்கதேச அதிபர் சஹாபுதீன் இராஜினாமா!

வங்கதேச அதிபர் சஹாபுதீன் தனது பதவிக் காலம் முடிவ தற்கு முன்பே பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். வங்​கதேச அதிப​ராக கடந்த 2023-ம் ஆண்டு பதவி​யேற்​றவர் சஹாபுதீன்​(76). இவர் முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வுடன் கூட்​ட​ணி​யில் இருந்​தவர்.

வங்​கதேசத்​தில் நீதிப​தி​யாக​வும் பணி​யாற்​றிய​வர். வங்​கதேசத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு அரசுக்கு எதி​ராக மாணவர்​கள் போராட்​டம் நடத்​தி​ய​தால் பிரதமர் ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார்.

ஆனால் சஹாபுதீன் அதிபர் பதவி​யில் தொடர்ந்​தார். இப்​ப​த​வி​யில் சஹாபுதீன் நீடிப்​பதை தற்​போதைய பிரதமர் தாரிக் ரகு​மான் தலை​மையி​லான அரசு விரும்​ப​வில்லை என செய்​தி​கள் வெளி​யா​யின. இந்​நிலை​யில் வங்​கதேச அதிபர் பதவியை ராஜி​னாமா செய்​வ​தாக சஹாபுதீன் அறி​வித்​துள்​ளார்.

அவரது பதவிக் காலம் முடிய இன்​னும் 2 ஆண்​டு​கள் உள்​ளன. ஆனால் மருத்​துவ காரணங்​களுக்காக அதிபர் பதவி​யில் இருந்து வில​கு​வ​தாக அவர் அறி​வித்​துள்​ளார்.

ராஜி​னாமா கடிதத்​தில் அவர், “உடல்நலம் சரியில்லாத​தால், அதிபர் பதவி​யில் இருந்து வில​கு​கிறேன்” என குறிப்​பிட்​டுள்​ளார்.

அவரது ராஜி​னாமா கடிதம் நாடாளு​மன்ற சபா​நாயகர் ஹஃபிஜுதீன் அகமது​விடம் வழங்​கப்​பட்​டது. வங்​கதேச அரசி​யல் சாசனப்​படி, புதிய அதிபர் தேர்வு செய்​யப்​படும் வரை, சபா​நாயகர்​ தற்​காலிக அதிப​ராக பொறுப்​புவகிப்​பார்​.