இந்தியா, இலங்கை, மாலைதீவுகள் உள்ளிட்ட நாடுகளை கொண்டு செயல்படும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு குழுவில் விரைவில் வங்கதேசம் சேர்க்கப்பட இருப்பதற்கு வங்கதேச ஊடகமான Dhaka Tribune வரவேற்பு தெரிவித்துள்ளது.
கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து இக்குழு செயல்படும்.
இந்திய பெருங்கடலில் சுற்றியுள்ள நாடுகள் இடையிலான இந்த கூட்டு பிராந்திய ஒத்துழைப்பு பல வாய்ப்புகளை உருவாக்கும் என அந்த ஊடகம் தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.