இந்திய ஆதரவு கட்சியை தடை செய்தது வங்காளதேசம்…

இந்தியாவின் ஆதரவு கொண்ட அவாமி லீக் என்ற முன்னாள் பிரதமர்  சேக் ஹசீனாவின் கட்சியை நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று குற்றம் சுமத்தி வங்களாதேஷ் அரசு தடை செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கடந்த புதன்கிழமை(14) தெரிவித்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை(12) வங்காளதேசத்தில் கொண்டுவரப் பட்ட பயங்கரவாத தடுப்பு சட் டத்தை பயன்படுத்தி நாட்டின் இறைமைக்கும், பாதுகாப்புக்கும் இந்த கட்சி மிகப்பெரும் ஆபத்தாக இருப்பதாக கூறி வங்காளதேசம் அவாமி லீக் கட்சியை தடை செய்துள்ளதுடன், அடுத்து வரும் பொதுத் தேர்தலில் அந்த கட்சி போட்டியிடுவதையும் தடை செய்துள்ளது.
எமது நாட்டின் தேர்தல் என் பது உள்நாட்டு விவகாரம் அதில் பிற நாடுகள் தலையிடுவது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என பங்களாதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமட் யூனுஸின் பிரதம ஆலோசகர் சபீக் அலம் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில் இந்தியாவை நேரிடையாக குறிப்பிடவில்லை என்றாலும் ஹசீனா அரசுக்கு பல வருடங்களாக இந்தியா ஆதரவு கொடுத்து வந்திருந்தது. நாட்டில் இருந்து தப்பியோடிய ஹசீனா தற்போது இந்தியாவில் தங்கியிருக்கின்றார். ஆனால் பங்களாதேசத்தின் இந்த தடை தமக்கு கவலை அளிப்பதாகவும், பங்களாதேசம் காலவகாசம் வழங்காது அவசரமாக மேற்கொண்டுள்ளது தமக்கு சந்தேகத்தை தோற்று வித்துள்ளதாகவும் இந்தியாவின் வெளிவிவகார பேச்சாளர் ரண்டீர் ஜெஸ்வால் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அரசுக்கு எதிராக  மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்
பாட்டங்களை தொடர்ந்து ஹசீனா இந்தியாவுக்கு தப்பியோடியிருந்தார். ஹசீனாவுக்கு அடைக் கலம் கொடுத்துள்ள இந்திய அரசு பங்களாதேசம் நேர்மையான அனைத்துலக விதிகளுக்கு அமை வான தேர்தலை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.