கிரிக்கெட் ஜாம்பவான் மரணம்: அவுஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்ன் மாரடைப்பால் திடீரென மரணமடைந்த செய்தி கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலைியல் ஷேன் வோர்னின் கடைசி ட்விட்டும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வோர்ன் தாய்லாந்தில் இருக்கும் ஒரு வில்லாவில் மயங்கி கிடந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஷேன் வோர்ன் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் இருப்பதாகவும் இதிலிருந்து மீள நேரம் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஷேன் வோர்னின் கடைசி ட்விட்டும் கிரிக்கெட் வீரர் மரணம் குறித்த பதிவு தான். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் மரணத்திற்கு அவர் இரங்கல் தெரிவித்திருந்தார். அவர் தனது பதிவில் ராட் மார் காலமான என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் தான் உத்வேக். ராட் கிரிக்கெட் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். ரோட் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருந்தார்.