சட்டவிரோதமாக குடியேற முனைவோருக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் சட்டவிரோதமாக நுழைவதற்கான “பூஜ்ஜிய வாய்ப்பு” இருப்பதாக அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ஆட்கடத்தலைத் தடுப்பதில் தொடர்ந்தும் இணைந்து செயற்படுகின்றன. பொருளாதார நெருக்கடியின் போது பல ஆட்கடத்தல் முயற்சிகள் பதிவாகியிருந்தன, அவற்றில் பெரும்பாலானவற்றைக் இலங்கை கடற்படை தோல்வியுறச் செய்தது என இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் ஆங்கில நலிதை ஒன்றுக்கு தெரிவிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஆட்கள் கடத்தல் என்பது பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினை, இது புதிதல்ல. ஆட்கடத்தலை சமாளிக்க இலங்கைக்கு அவுஸ்திரேலியா உதவுகிறது .

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிக்கும் எவருக்கும் அவுஸ்திரேலியாவை அடைவதற்கான “பூஜ்ஜிய வாய்ப்பு” இருப்பதாகத் தெரிவிக்கப்படும் வலுவான பிரச்சாரம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் தனது மனிதாபிமான தீர்வுத் திட்டத்தின் மூலம் அகதி அந்தஸ்து கோரும் எவருக்கும் ஒரு அமைப்பு இருப்பதாகவும், அத்தகைய விண்ணப்பங்கள் ஐ.நா. அகதிகள் நிறுவனத்தால் மதிப்பிடப்படும் என்றும் ஸ்டீபன்ஸ் கூறியுள்ளார்.