சமூக வலைத்தளங்களில் சிறுவர்களைப் பாதுகாக்க G20 நாடுகளின் ஆதரவை நாடுகிறது அவுஸ்திரேலியா

110 Views

சிறுவர்களைப் பாதுகாக்க


சமூக வலைத்தளங்களில் முறைகேடான நடத்தைகளிலில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்க உலகளாவிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியா விரும்புகிறது. இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று G20 உச்சி மாநாட்டில் அவுஸ்திரேலிய பிரதமர் உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

உலகப் பொருளாதாரம், சுகாதாரம், காலநிலை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் Scott Morrison  வியாழக்கிழமை ரோம் நகருக்குச் செல்கிறார்.

அவுஸ்திரேலியாவில் இயங்கும் சமூக வலைத்தள சேவைகள், தரவுகளைப் பரிமாறுபவர்கள் மற்றும் பிற இணையத்தள சேவை வழங்குவோர் தனிப்பட்ட தரவுகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற சட்ட முன்வரைவை இந்த வாரம் அவுஸ்திரேலிய அரசு வெளியிட்டது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad சமூக வலைத்தளங்களில் சிறுவர்களைப் பாதுகாக்க G20 நாடுகளின் ஆதரவை நாடுகிறது அவுஸ்திரேலியா

Leave a Reply