இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்குவதற்கு அவுஸ்திரேலியா இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் தூதுவர் பெளல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
“இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைகிறது. இது நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான நமது நீண்டகால ஒத்துழைப்பு தொடர உதவும். இந்தியப் பெருங்கடல் அண்டை நாடுகளாக, பிராந்திய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் மூன்று பிராந்தியங்களும் உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன என கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் ட்வீட் செய்துள்ளது.