இலங்கையில் இரு வியாபாரப் பங்காளித்துவங்களை அறிவித்தது அவுஸ்திரேலியா

வியாபாரப் பங்காளித்துவங்களை அறிவித்தது அவுஸ்திரேலியா

வியாபாரப் பங்காளித்துவங்களை அறிவித்தது அவுஸ்திரேலியா: இலங்கையில் கொரோனா பொருளாதார மீட்சிக்கு உதவும் முகமாக அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் வியாபார பங்காளித்துவங்கள் தளத்தின் (BPP) பிரகாரம் இரு புதிய பங்காளித்துவங்களை இலங்கைக்கான பிரதி உயர் ஸ்தானிகர் அமன்டா ஜூவெல் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் கொரோனா மூலம் மிகக் கடுமையான பொருளாதார பாதிப்பிற்கு உள்ளான நாடுகளுள் இலங்கையும் ஒன்று.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அமன்டா ஜூவெல், இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார வீழ்ச்சியினால் சிறிய வியாபாரங்கள் முறைசார தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்குக் கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டது என்று  தெரிவித்துள்ளார்.

தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா

கொரோனாவில் இருந்து இலங்கை பொருளாதார ரீதியாக மீட்சி பெறுவதில் தனியார் துறையின் முக்கியமான பங்களிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் வியாபாரத்தினால் உந்தப்படும் பொருளாதார வளர்ச்சிக்கும் கொரோனாவிலிருந்தான  மீட்சிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் வியாபாரப் பங்காளித்துவங்கள் தளத்தின் ஊடாக உதவுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

BPP என்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரதான முன்முயற்சிகளில் ஒன்றாகும். நிலைபெறு தன்மையுள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பை ஊக்குவிக்கும் அதே சமயத்தில் வியாபாரத்திற்கான வணிக வருமானங்களை உறுதிப்படுத்துகின்ற வியாபாரங்களுடனான பங்காளித்துவங்களுக்கு அது உதவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-144-august-22-2021