வவுனியாவில் விலைவாசிக்கு எதிராக பொருட்களை சுமந்தபடி கவனயீர்ப்புப் போராட்டம்

பொருட்களை சுமந்தபடி கவனயீர்ப்புப் போராட்டம்

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று (31) வாழ்க்கைச்சுமை மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொருட்களை சுமந்தபடி கவனயீர்ப்புப் போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்திற்கு எதிராகவும் ராஜபச்சாக்களின் அரசாங்கத்ததை விரட்டியடிக்கும் நடவடிக்கையாகவும் இட்போராட்டம் இடம்பெற்றது.

IMG 20220331 WA0017 வவுனியாவில் விலைவாசிக்கு எதிராக பொருட்களை சுமந்தபடி கவனயீர்ப்புப் போராட்டம்

மண்ணெண்ணை , பெற்றோல் , சமையல் விரிவாயு , பானைகள் , மின்சார உபகரணங்கள்  போன்ற சமையலறை உபகரணங்களை சுமந்து வந்து இப் போராட்டத்தை மேற்கொண்டனர் . வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு, பொருளாதாரச் சுமைகளை வெளிப்படுத்தும் பதாதைகளையும்  ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டனர்.

IMG 20220331 WA0019 வவுனியாவில் விலைவாசிக்கு எதிராக பொருட்களை சுமந்தபடி கவனயீர்ப்புப் போராட்டம்

புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் ஏனைய தமிழ் அமைப்புக்களும் இணைந்து இப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.