உக்ரைனிலிருந்து இதுவரை 40 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் – ஐ.நா

335 Views

அகதிகளாக இதுவரை 40 இலட்சம் பேர்

உக்ரைனிலிருந்து அகதிகளாக இதுவரை 40 இலட்சம் பேர்

கடந்த மாதம் பெப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷியா இராணுவ தாக்குதலை தொடங்கி முன்னெடுத்து வருகின்றது. 

இந்த நிலையில் இதுவரை உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் ஆணையர் பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர், “நான் இப்போது உக்ரைனுக்கு வந்திருக்கிறேன். இந்த அர்த்தமற்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் வழிகள் குறித்து ஐ.நா மற்றும் எல்விவ் நகரில் உள்ள அதிகாரிகளுடன் விவாதிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply