429 Views
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புத்தர் சிலை
மிக தொன்மையான வரலாற்றை கொண்ட முல்லைத்தீவு குருந்தூர்மலையில் உள்ள ஆதிசிவன் கோவில் உடைக்கப்பட்டு அங்கே விகாரை அமைக்கப்பட்டு இன்று (12 ம் திகதி) புத்தர் சிலை வைக்கப்படவுள்ளது.
அதனையெதிர்த்து விகாரைக்குச் செல்லும் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பெளத்த தேரர்களுக்கும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.