உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 51 பேர் பலி

உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன்  இராணுவத்தினர் உள்பட 51 பேர் பலியாகியுள்ளதோடு 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள குறிப்பில், “உக்ரைனின் மத்தியப் பகுதியில் உள்ள போல்டாவா பகுதியை நோக்கி ரஷ்யா திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி எழுப்பியும் கூட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல போதிய அவகாசம் இல்லாமல் போனது. ஏவுகணை தாக்குதல் நடந்த பகுதியில் இராணுவ அகாடமி, மருத்துவமனை ஆகியன இருந்தன. இந்தத் தாக்குதலில் உக்ரைன் இராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்தனர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” என்றுள்ளது.