அமெரிக்க பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு-10 பேர் பலி

65 Views

பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின்  நியூயார்க்  மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  சந்தேகத்தின் பெயரில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இது இனவெறி நோக்குடன் தூண்டப்பட்ட வெறுப்புணர்வுக் குற்றமாக  காவல்துறையினர்  விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டை “வன்முறையான பயங்கரவாத செயல்” என்று  அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ  தெரிவித்துள்ளது.

“இந்தச் சம்பவத்தை வெறுப்புணர்வு குற்றமாகவும், இன ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிரவாதமாகவும் கருதி  நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பின் பஃப்பலோ அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரியான ஸ்டீபன் பெலோங்கியா செய்தியாளர்களிடம்  குறிப்பிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply