புதிய கிருமிகளை ஆய்வு செய்வதில் சாதனை படைக்கும் செயற்கை நுண்ணறிவு

விஞ்ஞானிகளினால் 20 வருடங்கள் மேற்கொள் ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட சுப்
பர்பக் எனப்படும் பக்ரீரியா கிருமிகள்  தொடர்பான தகவல்களை செயற்கை நுண்ணறிவு 48 மணி நேரத்தில் ஆய்வுசெய்து தகவல்களை தந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
தற்போதுள்ள மருந்துகளி னால் ஏன் சில பக்ரீரியாக்களை கொல்ல முடிவதில்லை என்பது தொடர்பில் பிரித்தானியாவின் இம்பீரியல் கல்லூரி எனப்படும் பல் கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோஸ் ஆர் பெனடேஸ் தலைமை யிலான குழுவினர் 20 ஆண்டுகள் செய்த ஆய்வுகளை செயற்கை நுண்ணறிவு இரு நாட்களில் முடித்துள்ளது.
தமது ஆய்வுகள் இதுவரையில் வெளியிடப்பட வில்லை எனவும், தனது கணினி களில் இருந்து கூகுள் நிறுவனம் தகவல்களை எடுத்ததா என்பது தொடர்பிலும் தான் கூகுள் நிறுவனத்திடம் வினாவியதாகவும் ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை எனவும் இது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற் படுத்தும் அது மக்களுக்கு அதிக நன்மைகளை உருவாக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள் ளார்.