சீனாவை மகிழ்விக்கக் கைது செய்து, இந்தியாவை சமாளிக்க விடுதலையா?  என்.எம்.ஆலம் கேள்வி

இந்தியாவை சமாளிக்க விடுதலையா

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த   வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தளத்தின் மன்னார் மாவட்ட தலைவர் என்.எம்.ஆலம்,

“நாங்கள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போது, நடவடிக்கை எடுக்கப்படாத இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கைகள், அண்மையில் வடக்கிற்கு  சீனத் துாதுவர் வந்த பின்னரே இடம்பெற்றுள்ளன.

இது சீனாவை மகிழ்விக்கவா? இந்திய மீனவர்களை கைது செய்த பின்னர் இந்தியாவை சமாளிக்க விடுதலையா,?” என   கேள்வி எழுப்பியுள்ளார்.