யாழில் பாதுகாப்பு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை பகுதி 38 கீழ் அரச காணிகளாக்கி படைத்தரப்பிற்காக அபகரிக்கத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலி.வடக்கு மீள் குடியேற்றக் குழுவின் தலைவர் சண்முகலிங்கம் கஜீவன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக பல தனியார் தேவைக்காக பல தனியார் காணிகள் அளவிட நில அளவைத் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அதனை தந்திரமான முறையில் கையாள்வதற்கான காணி சுவீகரிப்பு பகுதி – 5இன் கீழ் அளவிடும் காணிகளின் விவரங்கள் காட்சிப் படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் மக்கள் செல்ல முடியாத உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை அளவீடு செய்வதற்காக காட்சிப் படுத்தப்படும் விவரங்களை மக்கள் பார்வையிட முடியாத வகையில் காட்சிப்படுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாது குறித்த விடயம் நடை பெற்று முடிந்ததாக பகுதி 38 இன் கீழ் தனியார் காணிகளை அரச காணிகளாக்கும் முயற்சிகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் ஒன்று எதிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதோடு அதனை அறிந்து கொள்ளவும் முடியாது.
அகவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்தி காணி சுவீகரிப்பு வர்த்தமானியை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.