சொந்த காணியை மீட்டுத் தாருங்கள்-பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை

காணியை மீட்டுத் தாருங்கள்

திருகோணமலை, மொறவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பன்குளத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான காணியை அடாத்தாக வனவளத் திணைக்களத்தினர்  அபகரித்துள்ளனர்.

இந்நிலையில், தமது காணியை மீட்டுத் தாருங்கள் என அப் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர். 1976 ம் ஆண்டில் குடியிருந்த இடமே இவ்வாறு இதனை அத்துமீறி கையகப் பகுத்தியுள்ளனர். தற்போது சொந்த இடமின்றி வாழ்ந்து வருகிறோம்.

காணியை மீட்டுத் தாருங்கள்

பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தோர்களுக்கு ஐந்து ஏக்கர் பன்றி வளர்ப்பதற்காக நீர் கொழும்பை சேந்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்களது சொந்த காணியை பறித்துள்ளார்கள்.

சர்வதேசம் இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும். ஆரம்ப காலம் தொட்டு இங்கேயே வாழ்ந்து வருகிறோம். தற்போது சொந்தமான காணி இல்லை. எனவே தங்களுடைய காணியினை பெற்றுத் தருமாறு உரியவர்களிடம் கோரிக்கை விடுகின்றோம்.