தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை சிறப்பாக முன்னெடுக்க ஏற்பாடு

23 6416b15b7d50f 1 தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை சிறப்பாக முன்னெடுக்க ஏற்பாடு

இந்தியா இராணுவத்தினை வெளியேறக்கோரியும் தமிழர்களின் கோரிக்கையினை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது நினைவு தினத்தை சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஊடக சந்திப்பு இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன்போது பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…………

01. தரு.ந.முரசொலிமாறன் – குருக்கள் (கிழக்கு குருமார் ஒன்றியத்தின் மண்முனை வடக்கு பிரதேச தலைவர்)

இந்த நிகழ்வானது கடந்த காலங்களில் ஒழுங்கில்லாமல் ஒவ்வொருவருடைய வசதிகளுக்கும் நேரத்துக்கும் ஏற்ப தியாக தீபத்தின் தீபச்சுடர் ஏற்றப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது அவ்வாறு இல்லாமல் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பெரியோர்களை கொண்டு ஒரு கட்டமைப்பினை உருவாக்கி இருக்கின்றோம்.

அந்த கட்டமைப்பின் கோட்பாட்டுக்கு அமைவாக இந்த நிகழ்வானது எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. தியாகதீபம் அன்னை பூபதி நினைவேந்தல் அழைப்பு நாளானது மேற்படி தியாகதீபம் அன்னை பூபதியின் 35வது நினைவேந்தல் எதிர்வரும் 19.04.2023 அன்று நாவலடியில் அமைந்துள்ள அன்னையின் சமாதியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தாங்களும் தங்கள்ஸஅமைப்பில் உள்ளவர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

02. லோ.சாந்தி – அன்னை பூபதியின் மூத்த மகள்…..

அன்னை பூபதியின் 35-வது நினைவேந்தல் நிகழ்வினை இம்முறை விசேடமாக நாங்கள் கொண்டாடுகின்றோம் அமைப்புகளை உருவாக்கி அதன் காரணமாக மதம் பேதம் பாராமல் அனைவரும் அம்மாவுக்கு  அஞ்சலி செலுத்த வேண்டும்.

03. சபா.சிவயோகநாதன் – சிவில் சமுக செயற்பாட்டாளர்…….

1988 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 19 ஆம் தேதி அந்த நேரத்தில் இருந்த இந்திய ஆக்கிரமிப்பு படை வெளியேற்றப்பட வேண்டும், யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் அன்னை பூபதி அவர்கள் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணாநோன்பு இருந்து 30 நாட்களின் பின்னர் சித்திரை மாதம் 19ஆம் தேதி தனது இன்னுயிரை இந்த பூவுலகிற்காக நீத்தார்.

தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடங்களும் நினைவேந்தர்கள் நடந்தாலும் அவை முறையே செய்வதற்கான ஒரு கட்டமைப்பினை உருவாக்கி இந்த முறை சிறப்பாக அந்த நிகழ்வுகள் யாவும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.

இவ்நினைவு தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றது அதனுடைய பரிசளிப்பு நிகழ்வுகள் அன்னை பூபதியின் நினைவேந்தலின் நிகழ்வுகள் இடம் பெற்றதன் பின்னர் நடைபெறும்.

அன்னை பூபதி பல கோரிக்கைகளை வைத்து உன்னால் நோன்பு இருந்து தனது உயிரை நீத்தார் அதற்கு அடையாளமாக அடையாள உண்ணாவிரதம் ஒன்று காலை 6:00 மணி தொடக்கம் மதியம் ஒரு மணி வரை மாமாகேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் என்பது மோசமான செயல்பாடு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இப்படியாக பிரதமராக இருந்த நேரம் இது கொண்டுவரப்பட்டது அப்போ நான் நினைக்கின்றேன் 2015ல் வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர அவர்கள் இருந்த நேரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 30ஃ1 தீர்மானத்திற்கு அமைவாக இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்ற உறுதிமொழி அளித்ததன் பிரகாரம் அதற்கான வேலைத்திட்டங்கள் நடத்தப்பட்டது.

2017 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட வடக்கு கிழக்கில் இந்த சட்டத்திற்கு எதிராக பலவிதமான போராட்டங்கள் விழிப்புணர்வு கருதரங்குகளை செயல்படுத்திக் கொண்டிருந்தோம் அது மீண்டும் இப்பொழுது அவர்களுக்கு சர்வதேசத்தின் நெருக்குவாரங்கள் மற்றும் ஐஆகு இன் கடன் வசதியில் எடுப்பதற்காகவும் ஜிஎஸ்பி பிளஸ் ஐ தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டு வருவதற்கு எத்தனித்து இருக்கின்றார்கள்.

இந்த சட்டம் குறிப்பாக தென்பகுதியில் இருக்கின்ற தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அரசியல் மாற்றத்திற்காக போராட்டங்களை நடத்தும் பொழுது அதில் தங்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதன் காரணத்திற்காக முன்முரமாக இருக்கின்றார்கள் அதையும் தாண்டி வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் மிக மோசமான இன சுத்திகரிப்பை மேற்கொள்வதற்கான சில கட்டமைப்புகள் இருக்கின்றது.

மகாவலி அபிவிருத்தி திட்டம் வன ஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என பல திணைக்களங்கள் இருக்கின்றது ஆனால் இவை நமது நிலங்களை ஆக்ரமித்து நிற்கும் இந்த நேரத்தில் அதற்கு எதிராக நாங்கள் போராட்டத்தை நடத்தும் பொழுது இந்த நாட்டில் இருக்கின்ற சட்டத்திற்கு எதிராக இவர்கள் போராடுகின்றார்கள் எனவே இவர்களுடைய செயற்பாடுகள் இந்த நாட்டின் தேசியத்திற்கும் இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்கின்ற அரச தரப்பு அதிகாரி ஒருவர் நினைப்பாராக இருந்தால் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு செல்பவர்களை கைது செய்யலாம்.

இந்தப் பிரச்சினைகள் தென்பகுதியில் பெரிய அளவில் பாதிக்காவிட்டாலும் தென்பகுதியில் இதற்கு எதிராக போராடுகிறவர்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றவர்களின் எதிர் காலத்தில் வரப்போகும் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும்.

அதே போன்று நினைவேந்தல்கள் செய்யும்போது அதே சட்டத்திற்கு புறம்பானதாகவும் அல்லது இவர்கள் பயங்கரவாதத்தை மீண்டும் ஊக்கிவிப்பதற்காக இந்த செயற்பாடுகளை செய்கின்றார்கள் என்று சொல்லி அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் எனவே வடக்கு கிழக்கு பிரதேசங்களையும் தென்பகுதி பிரதேசங்களையும் பார்க்கும் பொழுது அரசியல் ரீதியாக பலவிதமான வித்தியாசங்கள் இருக்கின்றது. எனவே இந்த செயற்பாடுகள் வடக்கு கிழக்கு மக்களை எதிர்காலத்தில் பெரிய அளவில் பாதிக்க இருக்கின்ற என்கிற விடயங்களை சகல அரசியல் கட்சிகளும் சிவில் சமூகமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

25 ஆம் தேதி பாராளுமன்றத்தில் முன்மொழிவுகாக இந்த சட்டம் கொண்டுவரப்பட இருக்கின்றது அந்த நேரத்தில் கடுமையான எதிர்கோர்களை எழுப்பி இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்தாமல் தடுப்பதற்கான அனைத்து விதமான வேலைகளையும் செய்ய வேண்டும்.