கடந்த 25 மாதங்களில் விவசாய அமைச்சுக்கு ஐந்தாவது செயலாளர் நியமனம்

விவசாய அமைச்சுக்கு ஐந்தாவது செயலாளர்

விவசாயத்துறை நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், கடந்த 25 மாதங்களில் விவசாய அமைச்சுக்கு ஐந்தாவது செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து  மூத்த பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நீக்கப்பட்டு, D.M.L.D. பண்டாரநாயக்க, விவசாய அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வாய்மொழி மூலம் மாத்திரமே அறிவிக்கப்பட்டதாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர், மூத்த பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

உண்மையை  கூறியதற்காகவே தாம் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக   அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் தாம் வினவிய போது, அவர் அதனை அறிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்ததாகவும்   உதித் கே. ஜயசிங்க கூறினார்.

Tamil News