இந்தோனேசியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் ஆப்கான் அகதிகள் 

போராட்டத்தில் ஈடுபடும் ஆப்கான் அகதிகள் 

போராட்டத்தில் ஈடுபடும் ஆப்கான் அகதிகள்: இந்தோனேசியாவின் Medan நகரில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகளை இந்தோனேசிய காவல்துறை வலுக் கட்டாயமாக வெளியேற்றுள்ளது.

போராட்டம் மேற்கொண்ட இடத்திலிருந்து வெளியேற ஆப்கான் அகதிகளை காவல்துறை எச்சரித்ததை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.  இந்தோனேசியாவிலிருந்து கிடைத்துள்ள காட்சிகள் மூலம் ஆப்கான் அகதிகளை மோசமான முறையில் காவல்துறை கையாண்டுள்ளலம்மை தெரியவந்துள்ளது.

கடந்த ஆறு வாரங்களாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் முன்பு போராட்டம் நடத்தி வந்த ஆப்கான் அகதிகள், அங்கு தற்காலிக கூடாரமிட்டு தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தோனேசியாவில் பல ஆண்டுகளாக நிச்சயத்தன்மையற்ற நிலையில் வாழும் தங்களை வேறொரு நாட்டில் குடியமர்த்த வேண்டும் என்பதே ஆப்கான் அகதிகளின் கோரிக்கையாக உள்ளது.