715 Views
கறுப்பு வரலாற்றை கொண்ட ஒருவரே இந்த நாட்டின் தலைவராக இருக்கிறார். நினைவில் கொள்ளுங்கள். அவரது உத்தரவிலேயே வெள்ளை வான் கருப் பொருள் உருவானது. அவரது உத்தரவிலேயே லசந்த விக்ரமதுங்க, சிவராம் உள்ளிட்டோர் படுகொலை செய்யப் பட்டனர்.
எக்னெலிகொட, லலித், குகன் போன்றோர் காணாமல் ஆக்கப்பட்டனர். ஊடகங்களை ஒடுக்க மேற் கொள்ளப்படும் கீழ்த் தரமான சதியை முறியடிக்க வேண்டும் என அநுரகுமார திஸநாயக்க எம்பி இன்று தெரிவித்துள்ளார்.
சக்தி சிரச ஊடகங்களை அரசு முடக்க திட்டமிடுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையிலேயே இன்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இக் கருத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.