ரணிலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என அறிவிப்பு

02. ‘பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்யமுடியும்’ என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘பட்டலந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தமது அறிக்கையில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது’.’விரிவான சாட்சியங்களை பதிவு செய்ததன் பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிநபர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்கும் உப குழு ஒன்றை நியமிப்பதற்கும். அடுத்தக்கட்ட நடவடிக்கைகைள முன்னெடுப்பதற்கும் அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது.

இந்தநிலையில், நேற்று (16) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீது இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.