மேலும் 198 பேரை ஒரே நாளில் பலியெடுத்த கொரோனா ; மரணமானோர் தொகை 7 ஆயிரத்தை தாண்டியது

544 Views

corona death மேலும் 198 பேரை ஒரே நாளில் பலியெடுத்த கொரோனா ; மரணமானோர் தொகை 7 ஆயிரத்தை தாண்டியதுஇலங்கையில் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரே நாளில் நேற்று 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரே நாளில் அதிக அளவானோர் உயிரிழந்த நாளாக நேற்றைய நாள் அமைந்துள்ளது. இவற்றுடன் நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்து 7,183 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 117 ஆண்களும் 81 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள நாளாந்த கொரோனா மரணங்கள் குறித்த புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இன்று ஒரே நாளில் 3,884 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இது வரையில் 3,85,696 பேர் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காயுள்ளனது.

இந்நிலையில் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 211,876,655 ஆக அதிகரித்து,4,433,436 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply