கோட்டாவுக்கு எதிரான அணிதிரளத் தயாராகும் அமெரிக்க வாழ் தமிழர்கள்; புதனன்று ஆர்ப்பாட்டம்

152 Views

அமெரிக்க வாழ் தமிழர்கள்

ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக அமெரிக்க வாழ் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

#GoBackGota என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த எதிர்ப்பு ஆர்பாட்டமான எதிர்வரும் புதன்கிழமை (செப் 22) காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா பொதுமன்றின் முன் இடம்பெற இருகின்றது.

தமிழர் தேசத்தின் மீதான இனஅழிப்பு ஆக்கிரமிப்பு போரின் போது சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை செயலராக கோட்டாபய ராஜபக்‌ஷ இருந்துள்ளதோடு, வலிந்து காணமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய இடத்திலும் இவர் இருக்கின்றார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply