திலீபன் நினைவேந்தல்; புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு

248 Views

புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு
அகிம்சை போராளி தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தொடர்ச்சியாக ஐந்தாவது நாட்களாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வை புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக ஐந்து நாள் நினைவேந்தலின் போதும் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ உளவுத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் நிலையும் நினைவேந்தலில் பங்குபற்றியவர்களை புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக இன்று ஐந்தாவது நாளாகவும் நினைவஞ்சலி செலுத்துவோரை அச்சுறுத்தும் வகையில் ராணுவத்தின் உளவுத் துறையினர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply