மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

420 Views

அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை இதன் மூலம் அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார்.

57 வயதான டேவிட் பென்னட் என்ற நபர் ஒருவருக்கே இவ்வாறு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏழு மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த நபர் மூன்று நாட்கள் கடந்த நிலையில் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

பென்னட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாக இந்த இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் அவர் உயிர் பிழைப்பதற்கான நீண்ட கால வாய்ப்புகள் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Tamil News

Leave a Reply