இலங்கையை விட்டு வெளியேறும் அமெரிக்க நிறுவனம்

டோல் எனப்படும் மரக்கறி மற்றும் பழங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனம், இலங்கையை விட்டு வெளியேறுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

டோல் லங்கா எனப்படும் இந்த நிறுவனம், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள், பழவகைகளை உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றது. வாழைப் பழங்களை ஏற்றுமதி செய்வதில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்றது.

தென்னிலங்கைப் பகுதியில் 50,000 ஏக்கர்கள் அரச காணிகளில் டோல் நிறுவனம் உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் இலங்கை அரசு பெருமளவான வருமானத்தைப் பெற்று வருகின்றது.

ஆனால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இரசாயனப் பசளை தொடர்பான நெருக்கடிகளே தமது இந்த முடிவுக்கான காரணம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137
ilakku Weekly Epaper 137 July 04 2021 இலங்கையை விட்டு வெளியேறும் அமெரிக்க நிறுவனம்

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 இலங்கையை விட்டு வெளியேறும் அமெரிக்க நிறுவனம்