கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பெறுகின்ற பயிலுநர் ஆசிரியர்களின் நிதிச் சுமையை இலகுபடுத்துவதற்காக, அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 20,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைப்பதாக என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அதிகரிப்பானது 2027 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து ரூ. 10,500 இலிருந்து ரூ. 20,000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2027 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோது இதனைத் தெரிவித்துள்ளார்



