அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

115 Views

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  அனைத்து பல்கலைக் கழக பிக்குகள் ஒன்றியத்தின்  ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுவிக்கக்கோரி தும்முல்ல சந்தியிலிருந்து கொள்ளுப்பிட்டி வரை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டம் பேரணியாக பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக சென்றபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  அனைத்து பல்கலைக் கழக பிக்குகள் ஒன்றியத்தின்  ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் டி.என்.எல். மஹவத்த நேற்று வியாழக்கிழமை (17) மாலை உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply