வவுனியாவில் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பின  

83 Views

அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு

இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று (22) முதல் ஆரம்பமாவதையடுத்து வவுனியா மாவட்டத்திலும் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.

இதன்படி, 6ம் தரம் முதல் தரம் 9ம் வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளே இன்று (22) ஆரம்பமாகின்றன. முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையான வகுப்புக்களுக்கும், 10ம் தரம் முதல் 13ம் தரம் வரையான வகுப்புக்களுக்கும் ஏற்கனவே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

IMG 20211122 070145 resize 53 வவுனியாவில் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பின  

இந்த நிலையில், இன்று (22) முதல் அனைத்து வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

மேலும் வவுனியா மாவட்டத்தில் இன்றையதினம் அதிகளவான மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகமளித்து வருகின்றனர்.

இதேவேளை,இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply