நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு அனைத்து அமைச்சுகளும் பொறுப்பேற்க வேண்டும்-ரணில்

73 Views

அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு அனைத்து அமைச்சுகளும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply