இலங்கைக்கு கடன் வழங்கிய அனைவரும் அதன் கடன் சுமையை பகிர்ந்துகொள்ளவேண்டும் – சீனா

இலங்கையின் கடன் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு சீனாவின் நிதியமைப்புகளிற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அதன் கடன்சுமைகளை குறைப்பதற்கும் பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கும் சர்வதேச நிதிஅமைப்புகளுடன் இணைந்து சீனா செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் நியாயமான சுமை என்ற அடிப்படையில் வர்த்தக மற்றும் பன்னாட்டு கடன்கொடுப்பனவாளர்கள் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.