மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு அனைவருக்கும் அழைப்பு

நாளை  நான்காம் திகதி மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ட்விட்டர் பதிவொன்றில் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

அந்த பதிவில் மேலும், எப்போதும் பெப்ரவரி 4ஆம் திகதி தமிழருக்கு இருள் தினமாகும். எமது உரிமைகளை நாம் பெற்றெடுக்க வேண்டும். எமது இனமும் சம உரிமையுடன் வாழ வேண்டும்.

அனைவரும் வருகின்ற பெப்ரவரி நான்காம் திகதி மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் காலை 9  மணிக்கு எமது இனத்தின் சுதந்திரத்துக்காக ஒன்றுகூடுவோம் என்று மேலும் கூறியுள்ளார்.