கடன் பொறியிலிருந்து விடுபடுவதற்காக உலகின் சக்திகளிடம் சரணடைய முடியாது-ரணில்

பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டுள்ள நாம் கடன் பொறியிலிருந்து விடுபட வேண்டும். அதற்காக உலகின் பொருளாதார சக்திகளிடம் சரணடைய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியல் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில்   கடந்த  புதன்கிழமை நடைபெற்ற  ஓர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியுமென்று நம்புகின்றேன். இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது” என்றார்.